Saturday, July 08, 2006

எது சிறந்த இனம்

ஆறு அறிவு படைத்த சிறந்த இனம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் மனிதன், உன்மையில் அவனா சிறந்த இனம், எந்த ஒரு இனமும் தன் இனத்தை கொல்கிறதா? இல்லையே, ஆறு அறிவு படைத்த மனித இனம் தான் தன் இனத்தையே கொல்கிறது, மற்ற எல்லா உயிரினங்களையும் ஆட்டிப்படைப்பதாக கூறுகிறானே, மிருகம் மற்றும் பறவை இனங்கள் சுனாமியை அறிந்து உயிர் பிளைத்தது, ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதனால் சுனாமி வருவதை அறிய முடிந்ததா? மனித நேயம் என்ற ஒன்றை மறந்தல்லவா வாழ்கிறான், ஆறு அறிவு என்று சொல்லும் மனித இனமே சிந்தித்துப் பார் நாம் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது கொண்டு செல்வது என்ன! ஒன்றுமில்லை, வாழும் கொஞ்ச நாளில் மனித நேயத்துடன் வாழ்வோம்.

Friday, June 30, 2006

தாய் - தந்தையர்


பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!

சின்னச் சின்னச் பிரச்சினைகளுக்காக நாம் நம்முடைய முதுமையடைந்த தாய் தந்தையர் மீது கோபம் கொள்கிறோம். வயதான காலத்தில் அவர்கள் எதையாவது பேசிவிட்டால் அல்லது வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவதே சிறந்ததாகும். நாம் சிறுபிள்ளையாக இருக்கும் போது நாம் என்னவெல்லாமோ அவர்களை பேசி இருப்போம், வெறக்கத்தக்க வகையில் நடந்திருப்போம் அவைகளை அவர்கள் சிறுபிள்ளைத்தானே என்று அல்லது நம் பிள்ளைத்தானே என்று பொருட்படுத்தாமல் விட்டிருப்பார்கள் அதுபோல் நாமும் அவர்களை வயதானவர்கள்தானே, அல்லது நம் தாய் தந்தையராயிற்றே என அவர்கள் நாதடுமாறிப் பேசுவதை அல்லது வெறுக்கத்தக்க முறையில் நடந்து கொள்வதை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

காரணம் முதுமையில் அவர்களுடைய அறிவாற்றல் சற்றே செயல்திறன் குன்றி விடும் அப்பொழுது அவர்கள் ஏறத்தாழ குழந்தையைப்போல் ஆகிவிடுவர் அதனால் திடகாத்திரமாக இருக்கும் நாம் கோபத்தில் அவர்களை எதையாவதுப் பேசிவிட்டோமானால் அதனால் மனம் தளர்ந்து விடுவார்கள் சஞ்சலப்படுவார்கள் மேலும் நம்மை எதிர்த்துப் பேசும் திடகாத்திரநிலை அவர்களிடம் இல்லாததால் உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்து விடுவார்கள்.

வயதான தன் தாய் தந்தையரை விரட்டிவிடும் எத்தனையோப் பேரை இன்று நாம் காண்கிறோம். தனக்கு திருமனம் செய்யும் வரை எந்த நிலையிலும் தனது தாய் தந்தையரை விட்டு பிரியாதவன் திருமனத்திற்குப்பின் அல்லது தான் செல்வநிலையை அடைந்த பின் தனது நிலையை மாற்றிக் கொள்கிறான். முதுமை நிலையிலுள்ள அவர்களை விரட்டுவதன் மூலம் அல்லது அவர்களை அம்போவென்று விட்டு விட்டு நாம் இடம் பெயர்ந்து விடுவதன் மூலம் அவர்கள் இரண்டு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், ஒன்று தங்களது மகளிடம் அடைக்கலம் புகுகிறார்கள் இரண்டு முதியோர்(அனாதை)இல்லம் செல்கிறார்கள். ஓடியாடி உழைக்க முடியாத தள்ளாடும் வயதில் தங்கள் மகளுடைய சந்ததிக்கு சேவகம் செய்து கொடுத்துவிட்டு ஒரு வாய்கவளம் உணவு உண்பார்கள் சில சமயம் மருமகனுடைய துணிகளை கூட துவைத்துப் போடும் பரிதாபநிலை ஏற்படும் சிலசமயம் பெரிய நோயின் தாக்குதலுக்கு இலக்காகி கவனிக்கப்படாமல் அப்படியே இறந்தும்விடுவார்கள்.

நம்மைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பல வருடங்கள் நம்மை கண்ணும் கருத்துமாக வளர்த்த அவர்களை நாம் அனாதையாக விட்டு விடுவதா!நம்மவர்களே அல்லாஹ் கூறுகிறான் அவனையன்றி (வேறுஎவரையும்)நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென்றும். அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவரோ உம்மிடத்தில் முதுமை அடைந்து விட்டால் அவர்களை ச்சீ என்று (கூட)சொல்லவேண்டாம். மேலும் அவ்விருவரையும் (உம்மிடமிருந்து)விரட்டவேண்டாம். மேலும் என் இறைவனே!நான் சிருபிள்ளையாக இருந்தபோது என்னை (ப் பரிவோடு)இவ்விருவரும் வளர்த்ததுபோல், நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

Saturday, June 24, 2006

கொடிய நோய் பொறாமை

இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான்.

ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்கிறோம்.

எப்பொழுது மேற்கூறப்பட்டவர்கள் தமக்குள்ளதை மட்டும் கொண்டு தன்னிறைவு அடைகின்றனரோ அப்பொழுது அங்கு அமைதி குடியேறுகின்றது, நிம்மதி அங்கு கொடிகட்டிப் பறக்கின்றது.

Wednesday, June 21, 2006

கண்ணீர்தேசம்

இந்த கவிதை தொகுப்பின் மூலமாக கவிஞர் ஹாஜாகனி அவர்களின் மனத்திறையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்

"மனிதன் செத்தால் பூமியில் புதைக்கலாம்
பூமியே செத்தால்....?"

இயந்திரத் துப்பாக்கிகளால்
காணாமல் போனது
மனித நேயத்தின் மரண ஓலம்....


இதயம் இல்லாத
இயந்திரத் துப்பாக்கிகளுக்கு
சுடத்தான் தெரியும்...?
சுதந்திரமா தெரியும்....

ஒருபுறம் விடிகையில்
மறுபுறம் இருள்வது பூமியின் நிலை....
இருபுறம் விடிகையில்
நடுபுறம் இருண்டது காஷ்மீரின் கதை....


அதன் தோட்டத்தில்
இனி அமைதியின் பூக்கள் அதிகம் பூக்கட்டும்

சமர் பூமியே....
உன்மீது
சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக....



பொருளாதாரப் புற்றுநோய்

உலகம் வட்டியைத் தின்று கொண்டிருக்கிறது
வட்டியோ உலகத்தை மென்று கொண்டிருக்கிறது


உள்ளுர் வங்கிக்கும், உலக வங்கிக்கும்
ஒரே லட்சியம் ஏழைகளை ஒழிப்பதே...
ஏழ்மையை அல்ல...

கத்தியைக் காட்டிக் கொள்ளையடிப்பவனை சமூகம் 'சீச்சி' என இகழ்கிறது. வட்டியின் மூலம் கொள்ளையடிப்பவனை 'சேட்ஜி' எனப்புகழ்கிறது...

மக்களை வருத்தி வட்டியைக் குடிப்பவனே...
எரிமலையினும் கொடியது ஏழையின் கண்ணீர்.

Sunday, June 18, 2006

நீதியின் உறக்கம்

இன்றைய சமூகம்
ஒரு போர்க்களம்
அதில் அறிவுதான்
நமது ஆயுதம்
படிப்பும் துடிப்பும்
பெறுக இளமையே
உன்னையும் உலகையும்
உயர்த்துதற்காக
உன்னையே உணர்ந்து
உணர்துதற்காக
உன் சமூகத்தை
உயர்துதற்காக


கட்டப்பட்ட இறைஆலயம்
இடிக்கப்பட்டது
ஒரு கட்டுக்கதையால்
டிசம்பர்-6 1992
அன்று கள்வனுக்கும்
காவலனுக்கும்
கள்ளக்கூட்டு
அது
தேசத்தின்
கழுவ முடியாதத் தீட்டு....


பாபரி மஸ்ஜித்
யாருக்குச் சொந்தம்...
பச்சிளம் பிள்ளையும்
பதில் சொல்லும் கேள்விக்கு
உச்ச நீதி மன்றம்
ஊமையாகி நிற்கிறது.
ஆண்டு பல கடந்தும்
முடியவில்லை வழக்கு
மாண்புள்ள நீதிக்கு இது
மாபெரும் இழுக்கு.
(ஆசிரியர் ஹாஜாகனி)

Thursday, June 15, 2006

இன்றைய தமிழ் இஸ்லாம்

இன்றைய சூழ்நிலையில் தமிழ் இஸ்லாம் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று கூறலாம் , மேலும் நம் சமுதாயத்தினர் ஒருமனதாக ஒன்று திரல்வதை நம் முன்னேற்றத்திர்கான முதல் படி எனலாம்.

மேலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நன்றாக கல்வி அறிவு புகுத்தி வரக்கூடிய காலங்கலிள் தமிழ் முஸ்லீம்கள் அணைத்து துறைகளிலும் இடம்பெற செய்வோம்.

ஏன் வெளிநாட்டில் உள்ளவர்களை குறிப்பிடுகிறேன் என்றால் தனது பிள்ளைகள் என்ன படிக்கின்றார்கள் என்பது கூட தெறியவில்லை அதிகமானவர்களுக்கு.