Friday, June 30, 2006

தாய் - தந்தையர்


பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!

சின்னச் சின்னச் பிரச்சினைகளுக்காக நாம் நம்முடைய முதுமையடைந்த தாய் தந்தையர் மீது கோபம் கொள்கிறோம். வயதான காலத்தில் அவர்கள் எதையாவது பேசிவிட்டால் அல்லது வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவதே சிறந்ததாகும். நாம் சிறுபிள்ளையாக இருக்கும் போது நாம் என்னவெல்லாமோ அவர்களை பேசி இருப்போம், வெறக்கத்தக்க வகையில் நடந்திருப்போம் அவைகளை அவர்கள் சிறுபிள்ளைத்தானே என்று அல்லது நம் பிள்ளைத்தானே என்று பொருட்படுத்தாமல் விட்டிருப்பார்கள் அதுபோல் நாமும் அவர்களை வயதானவர்கள்தானே, அல்லது நம் தாய் தந்தையராயிற்றே என அவர்கள் நாதடுமாறிப் பேசுவதை அல்லது வெறுக்கத்தக்க முறையில் நடந்து கொள்வதை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

காரணம் முதுமையில் அவர்களுடைய அறிவாற்றல் சற்றே செயல்திறன் குன்றி விடும் அப்பொழுது அவர்கள் ஏறத்தாழ குழந்தையைப்போல் ஆகிவிடுவர் அதனால் திடகாத்திரமாக இருக்கும் நாம் கோபத்தில் அவர்களை எதையாவதுப் பேசிவிட்டோமானால் அதனால் மனம் தளர்ந்து விடுவார்கள் சஞ்சலப்படுவார்கள் மேலும் நம்மை எதிர்த்துப் பேசும் திடகாத்திரநிலை அவர்களிடம் இல்லாததால் உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்து விடுவார்கள்.

வயதான தன் தாய் தந்தையரை விரட்டிவிடும் எத்தனையோப் பேரை இன்று நாம் காண்கிறோம். தனக்கு திருமனம் செய்யும் வரை எந்த நிலையிலும் தனது தாய் தந்தையரை விட்டு பிரியாதவன் திருமனத்திற்குப்பின் அல்லது தான் செல்வநிலையை அடைந்த பின் தனது நிலையை மாற்றிக் கொள்கிறான். முதுமை நிலையிலுள்ள அவர்களை விரட்டுவதன் மூலம் அல்லது அவர்களை அம்போவென்று விட்டு விட்டு நாம் இடம் பெயர்ந்து விடுவதன் மூலம் அவர்கள் இரண்டு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், ஒன்று தங்களது மகளிடம் அடைக்கலம் புகுகிறார்கள் இரண்டு முதியோர்(அனாதை)இல்லம் செல்கிறார்கள். ஓடியாடி உழைக்க முடியாத தள்ளாடும் வயதில் தங்கள் மகளுடைய சந்ததிக்கு சேவகம் செய்து கொடுத்துவிட்டு ஒரு வாய்கவளம் உணவு உண்பார்கள் சில சமயம் மருமகனுடைய துணிகளை கூட துவைத்துப் போடும் பரிதாபநிலை ஏற்படும் சிலசமயம் பெரிய நோயின் தாக்குதலுக்கு இலக்காகி கவனிக்கப்படாமல் அப்படியே இறந்தும்விடுவார்கள்.

நம்மைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பல வருடங்கள் நம்மை கண்ணும் கருத்துமாக வளர்த்த அவர்களை நாம் அனாதையாக விட்டு விடுவதா!நம்மவர்களே அல்லாஹ் கூறுகிறான் அவனையன்றி (வேறுஎவரையும்)நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென்றும். அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவரோ உம்மிடத்தில் முதுமை அடைந்து விட்டால் அவர்களை ச்சீ என்று (கூட)சொல்லவேண்டாம். மேலும் அவ்விருவரையும் (உம்மிடமிருந்து)விரட்டவேண்டாம். மேலும் என் இறைவனே!நான் சிருபிள்ளையாக இருந்தபோது என்னை (ப் பரிவோடு)இவ்விருவரும் வளர்த்ததுபோல், நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

0 Comments:

Post a Comment

<< Home